புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலி உறுப்பினர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தென்மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தெரிவித்துள்ளார்.
இல்லாவிட்டால் அவர்கள் மீண்டும் பிரிவினைவாத குழுக்களுடன் இணைந்துகொள்வார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.