சுமந்திரன் கொலை முயற்சி: விசாரணைக்கு உதவும் நோர்வே!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொலை முயற்சி குறித்த விசாரணைகளுக்கு நோர்வே அரசாங்கம் உதவத் தயாராகியுள்ளது.

இலங்கைகான நோர்வே தூதரகம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

தமிழ் புலம்பெயர் சக்திகள் சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்துள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது.

நோர்வேவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் புலம்பெயர் தமிழ் தரப்பே சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார்.

உத்தியோகபூர்வ அடிப்படையில் கோரிக்கை விடுக்கப்பட்டால் சுமந்திரன் கொலை முயற்சி குறித்த விசாரணைகளுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் உதவத் தயார் என தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட போதிலும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லை தெரிவித்துள்ளது. காவல்துறையினர் இது குறித்து கோரிக்கை விடுத்தால் உதவத் தயார் என தூதரகம் தெரிவித்துள்ளது.