யாழில் பிரபல விடுதி மீது வழக்கு!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் நேற்று இரவு யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் மதுபான சாலைகள் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவலொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொலிஸார் மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த ஊழியர் ஒருவரை கைது செய்ததுடன் குறித்த விடுதிக்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.