பொலிஸாருக்கு அடித்த யோகம்!

இந்த மாதம் முதல் பொலிஸ் அதிகாரிகளின் 40 வீத சம்பள அதிகரிப்பு அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அதிகாரிகளின் சம்பளத்தை 40 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நூற்றுக்கு 17 வீதமான அளவு 2016 ஜனவரி முதல் வழங்கப்பட்டு வந்துள்ளது.

மீதி 23 வீத சம்பள அதிகரிப்பை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகரம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், அதனை பெப்ரவரி மாதம் முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் பொலிஸாருக்கு நூற்றுக்கு 40 வீத சம்பள அதிகரிப்பு 2016 ஆம் ஆண்டிலேயே முதன் முறையாகக் கிடைத்தது.