ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயவினால் வெற்றியீட்ட முடியாது!!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராபஜக்ச, ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட மாட்டார் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹங்குராங்கெத்த பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று திரும்பும் போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியைத் தழுவுவார், பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியீட்டுவார்.

கூட்டு எதிர்க்கட்சி தனித்து தேர்தலில் போட்டியிடும் என்ற பிரச்சாரங்களில் உண்மையில்லை. போட்டியிடப் போவதில்லை என்ற காரணத்தினால் மஹிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சித் தனித்து போட்டியிடும் என கூறி வருகின்றார்.

அமைச்சரவை மாற்றத்தின் போது எனக்கு எவ்வித புதிய பதவியும் தேவையில்லை, தற்போது வகிக்கும் பதவி போதுமானது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானித்துள்ளனர். அது குறித்து ஊடகங்களுக்கு தற்போதைக்கு கருத்து வெளியிட முடியாது என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.