யுத்தக்குற்ற விசாரணைகளுக்காக கலப்பு நீதிமன்ற பொறிமுறை ஒன்றை அமைக்கும் வகையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுக்கும் முயற்சிகள் வெறும் கனவு மட்டுமே என அரசாங்கம் அறிவித்துள்ளது.
திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,வடக்கு மாகாணசபையினால் கலப்பு நீதிமன்ற பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக செய்தி ஒன்றை படித்தேன். எனினும், அது சாத்தியமற்றது.
நாம் ஒரு போதும் எமது படை வீரர்களையும், பொலிஸாரையும் காட்டிக்கொடுக்கப்பேவதில்லை. வடமாகாண முதலமைச்சரின் இந்த முயற்சி வெறும் கனவு மட்டுமே.
எவ்வாறாயினும், எமது பமை வீரர்களை காட்டிக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என தாம் உள்ளிட்டவர்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.