சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், தமிழக அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஓ.பி.எஸ்க்கு துணை முதல்வர் அல்லது சபாநாயகர் பதவியும், தற்போதைய சபாநாயகர் தனபாலுக்கு அமைச்சர் பதவியும் வழங்க வாய்ப்புள்ளதாம்.
மேலும், மபா.பாண்டியராஜன் நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக, செங்கோட்டையன் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், யாருக்கும் பதவி பறிக்கப்படாது என்றும் இலாக்கக்கள் மாற்றம் இருக்கும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.