முதல்வராகும் சசிகலா: நடராஜன் மருத்துவமனையில் அனுமதி! அபசகுணமா?

சசிகலா முதல்வராகும் தருணத்தில் அபசகுணமாக அவரது கணவர் உடல் நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிமுக கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் முதல்வர் பன்னீர் செல்வம் இன்று பிற்பகலில் ஆளுனருக்கு தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக கூறப்பட்டது. அதன் பின்னர் அது தொடர்பான உறுதியான தகவல் சற்று நேரத்திற்கு முன்னர் தான் வெளியாகியது.

இதனால் வரும் 9 ஆம் திகதி சசிகலா தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்பார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சசிகலாவின் கணவரான நடராஜன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அவருக்கு உயர் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனை என்று கூறப்பட்டு வருகிறது. இன்னும் நான்கு தினங்களில் சசிகலா முதல்வராகும் நிலையில் அபசகுணமாக அவரது கணவர் உடல் நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிமுக கட்சியினர் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது