நடிகர் ரஜினகாந்த் புதிய அரசியல் கட்சி ஒன்றை துவக்க ஆலோசனை நடத்தி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜின், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடத்தினார்.
அப்போது, நிர்வாகிகள் ரஜினியிடம் கூறியதாவது: தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள தால், மாற்று சக்தியை, தமிழக மக்கள் எதிர் பார்க்கின்ற னர்
சித்திரை மாதத்தில், முத்திரை பதிக்கும் விதத்தில், புதிய கட்சியை துவக்குவோம், உள்ளாட்சித் தேர்தலையும் சந்திப்போம்.
அ.தி.மு.க., – தி.மு.க., போன்ற கட்சிகளில், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள், 2-ம் கட்ட தலைவர்கள்,மாவட்டசெயலர்கள் என, பெரும் படையே, உங்கள் பின்னால் அணி வகுக்கும்.
எம்.ஜி.ஆர்., கட்சி துவக்கும்போது, ‘எனக்கு காமராஜர் தலைவர்; அண்ணாதுரை வழிகாட்டி’ என்றார். அதே பாணியில், நீங்களும் செயல்பட வேண்டும். எனவே, இந்த முறை அரசியல் வாய்ப்பை நழுவ விட வேண்டாம் என வலியுத்தியுள்ளனர்.
இதேசமயம், அமித் ஷா உட்பட ரஜினிக்கு நெருக்கமான நண்பர்கள் அவரை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்து, சில ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.