அமெரிக்காவில் புதிய அதிபராக பதவி ஏற்றிருக்கும் டொனால்டு டிரம்ப் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் அவருக்கு அமெரிக்க மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவரது உத்தரவுகளுக்கு எதிராக கோர்ட்டுகள் தடை உத்தரவுகள் பிறப்பித்துள்ளன.
இந்த நிலையில் டிரம்ப் தொப்பி அணிந்திருந்த 12 வயது கவின் என்ற சிறுவன் சக மாணவர்களால் தாக்கப்பட்டான். அவன் மிஸ் சோரியில் உள்ள பார்க்வே பள்ளியில் படிக்கிறான். அவன் தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் கையெழுத்திட்டு அமெரிக்காவை மீண்டும் பெரிய அளவில் உயர்த்திடுவோம் என்று எழுதப்பட்ட தொப்பியை அணிந்து பள்ளி பஸ்சில் வந்தான்.
அப்போது உடன் இருந்த சக மாணவர்கள் அந்த தொப்பிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதை கழற்றும்படி கூறினர். அதற்கு மறுக்கவே அவனை அடித்து உதைத்தனர்.
அது குறித்து வீடியோ வெளியானது. அதில் சிறுவன் கவினிடம், சுவர் கட்டுவதை நீ விரும்புகிறாயா?’ என ஒரு மாணவன் கேட்கும் காட்சி பதிவாகி உள்ளது.