ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கம் வேரூன்றி உள்ளது. அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமாக உள்ளன.
எனவே, தங்கள் இயக்கத்தை பலப்படுத்த புதிய ஆட்களை சேர்த்து வருகின்றனர். அதற்காக அகதிகள் முகாம்களில் இருக்கும் குழந்தைகள் கடத்தி வரப்படுகின்றன.
இவர்கள் லெபனான் மற்றும் ஜோர்டான் அகதிகள் முகாம்களில் இருந்து கடத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது. குழந்தைகளை கடத்தி வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். இதுவரை 88,300 குழந்தைகள் மாயமாகி இருப்பதாக ஐரோப்பிய யூனியன் போலீஸ் அமைப்பான ‘யூரோபால்’ தெரிவித்துள்ளது.
அகதிகள் முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு வழங்குவது போன்று ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் ‘ஸ்லீப்பர் செல்’ பிரிவினர் ஈடுபட்டு அங்கு இருக்கும் குழந்தைகளை கடத்துவதாக தெரிகிறது. இத்தகவலை தீவிரவாதத்துக்கு எதிரான அமைப்பு வெளியிட்டுள்ளது.