அமெரிக்காவின் ஜனாதிபதியாக தொடர டொனால்டு டிரம்ப்க்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது சமீபத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்டு டரம்ப் பதவியேற்றதிலிருந்து உலக நாடுகளை கலங்கடிக்கும் வண்ணம் பல அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதில் ஈராக், சிரியா உட்பட ஏழு நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்ததும் அமெரிக்கா மெக்சிகோ எல்லை இடையே சுவர் கட்டுவது போன்ற அறிவிப்பும் முக்கியமானதாகும்.
இந்நிலையில் மக்கள் மனநிலை தற்போது டிரம்ப் மீது எப்படி இருக்கிறது என்பதை அறிய The Public Policy Polling (PPP) அமைப்பு அமெரிக்க மக்களிடம் மெகா சர்வே ஒன்றை நடத்தியது.
அதில், 40 சதவீதம் பேர் டிரம்ப் மீது குற்றம்சாட்டியும், அவர் பதவி விலக வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
48 சதவீதம் பேர் இது அவர் பதவி விலக தேவையில்லை என கூறியுள்ளார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக 52 சதவீதம் பேர் பராக் ஒபாமாவே தங்கள் ஜனாதிபதியாக இருந்திருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.