அமெரிக்காவின் நியூயோர்க் நகர பொலிஸார் பணியில் இருக்கும் போது தங்கள் சிரூடையில் கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும் நியூயோர்க் நகர பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக பதவி ஏற்று டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவர் பிறப்பிக்கும் உத்தரவிற்கு எதிர்ப்புகள் இருந்தாலும், இவை அனைத்தும் நாட்டின் நன்மைக்காகவே செய்து வருவதாக விளக்கமளித்திருந்தார்.
அதில் ஒரு பகுதியாக நாட்டின் பாதுகாப்புத்துறை மேம்படுத்தப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து காவல் நிலையங்களும் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கு மாறும்படியும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் நியூயார்க் நகரத்தில் உள்ள பொலிஸார் அனைவரும் வரும் 2019ஆம் ஆண்டிற்குள் தங்களது சீருடையுடன் இணைந்த கேமரா பொருத்திக் கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக நியூயோர்க் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது
பொலிஸார் பணியில் இருக்கும் போது சூழ்நிலைக்கு ஏற்ப இந்த கேமராக்களை பொலிஸார் இயக்க உத்தரவு அளிக்கப்படும் என்றும், இதில் பதிவு செய்யப்படும் காட்சிகளை அவ்வளவு எளிதில் யாரும் அழித்து விட முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.