யந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை. பல பெரிய, நடக்க முடியாத விஷயங்களுக்கெல்லாம் முற்காலத்தில் யந்திரங்கள் உபயோகித்து பயன் அடைந்துள்ளனர். இதில் மிக எளிய அனைவரும் வீட்டிலேயே பின்பற்ற கூடிய, அதுவும் ஐப்பசி மாதம் தொடங்க வேண்டிய ஒரு சுலப தன ஆகர்ஷன முறையை பார்க்கலாம். குபேரர் உருவம் அல்லது படம் வைத்து செய்வது மிக சிறப்பு. (சீனத்து சிரிக்கும் குபேரர் சிலை அல்ல)
கீழே கொடுக்கப்பட்டுள்ள குபேர யந்திரத்தை அரிசி மாவினால் பூஜை அறையில் வரைந்து கொள்ளவும். பின்பு ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு-ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கவும். நாணயத்தின் மேல் ஒரு சிகப்பு ஒரு வெள்ளை பூவையும் வைக்கவும். கோலத்தின் முன் சுத்தமான நெய் தீபம் மண் அகலில் ஏற்றவும். இதை வடக்கு திசையில் செய்தால் சிறப்பு-அல்லது பூஜை அறையில் செய்யலாம்.
விளக்கேற்றியதும் கீழ் கண்ட குபேர மந்திரத்தை 11 முறை கூறி வழிபடவும். பின்பு நிவேதனம் செய்து பூஜையை முடித்து கொள்ளலாம். விளக்கு அணைந்ததும் 9 நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். மறுநாள் அதே நாணயத்தை உபயோகிக்கலாம். இதை ஐப்பசி மாதம் முழுவதும் செய்து வர, குபேரர் நம் அனைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி செல்வ செழிப்போடு வாழ வைப்பார். மேலும் ஐப்பசி மாதம் முடிந்ததும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளியிலும் இதை செய்யலாம். தங்களால் முடிந்த நேரத்திலும் செய்யலாம்.
மந்திரம் :
ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம்
ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம்
க்லீம் விட்டேஸ்வராய நமஹ