கடந்த 4 ஆம் திகதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி திருத்தலத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
காளஹஸ்தி பல்வேறு பாவங்களை போக்கும் பரிகாரங்கள் செய்யும் தலமாகவும் இருப்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
கடந்த 2-ம் திகதிதான் கோவிலின் ராஜகோபுரத்துக்கான கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. இந்நிலையில் வரும் 8 ஆம் திகதி இக்கோவிலின் கும்பாபிஷேம் நடக்கவிருந்த நிலையில் தீவிபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து மயிலாடுதுறையைச் சேர்ந்த ஜோதிடர் ரமேஷ் கூறியதாவது, கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது.
காளஹஸ்தியை காலன், அதாவது எமன், ஹஸ்தி (அஸ்தி) என்பதை சுடுகாட்டு சாம்பல் என்றும் சொல்வார்கள். காளஹஸ்தி இன்று ஆந்திர மாநிலம் என்றாலும் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களும் விஜயநகரப்பேரரசு காலத்தில் ஒன்றாக இருந்தவை.
தமிழகத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் கடந்த ஆட்சியில் கோபுர கலசம் கீழே விழுந்து நொறுங்கியது. அடுத்து ஜெயலலிதாவே முதல்வராக வந்தும் ஆட்சியில் அவர் நீடிக்கவில்லை.
அதுபோன்ற இந்த சம்பவமும் ஆட்சியாளர்களுக்கு ஆபத்தையோ, நாட்டில் திடீர் பேரழிவையோ ஏற்படுத்தலாம் என்பதற்கான அறிகுறியாகவே நாங்கள் கருதுகிறோம் என கூறியுள்ளார்.
இந்நிலையில், வருகிற பிப்ரவரி 9 ஆம் திகதி தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்கவிருக்கிறார் என்பதால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அவரது குடும்ப உறுப்பினர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
சசிகலாவுக்கு ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை இருப்பதால், தன்னுடைய ஆஸ்தான ஜோதிடர்களிடம் இதுகுறித்து விசாரிக்கவுள்ளார்.