அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தெரிவு செய்யப்பட்டதையடுத்து வருகிற 9 ஆம் திகதி அவர் முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பன்னீர் செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளார்.
பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அறிவித்துள்ளார்.
மேலும் சசிகலா முதல்வராக பதவி ஏற்கும் வரை பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் நீடிப்பார் என்றும், அதுவரை அமைச்சரவையை தொடர வேண்டும் என்றும் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.