சுவிட்சர்லாந்தின் ஷுரிச் நகரை சேர்ந்தவர் டிம்ஸ்டெய்னர் (40). இவர் தனது உடலில் பச்சை குத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் மிகுந்தவர். எனவே, உடலில் பல இடங்களில் ஓவியங்களை பச்சை குத்தியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெல்ஜியத்தை சேர்ந்த ஓவியர் விம் டெல்வாயிடம் தனது முதுகு பகுதியில் பலவிதமான பச்சை குத்திக் கொண்டார். அவற்றை பச்சை குத்திமுடிக்க 40 மணி நேரம் ஆனது.
இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டில் ஜெர்மனி கண்காட்சி அமைப்பாளர் ரிக் ரெயின்கிங்கிடம் பச்சை குத்திய தனது தோலை விற்பனை செய்து விட்டார்.
அதை தொடர்ந்து தற்போது கண்காட்சி எங்கு நடந்தாலும் அங்கு டிம் ஸ்டெய்னர் ஆ ஜராகி பச்சை குத்திய தனது உடம்பை காட்சி பொருளாக்கி வருகிறார்.
தற்போது தற்காலிக காட்சி பொருளாக இருக்கும் அவரது பச்சை குத்திய தோல் அவர் மரணம் அடைந்த பிறகு நிரந்தரமான காட்சி பொருளாகிறது.
இத்தகவலை அவரே தெரிவித்துள்ளார். அழியா புகழை அடைய இத்தகைய நடவடிக்கை மேற் கொண்டதாக கூறினார்.