இந்தியாவின் மூன்று வகை கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த அளப்பரியை பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், மும்பையில் உள்ள பிரபல விளையாட்டு பயிற்சி மையமான சிவாஜி பார்க் ஜிம்கானா கிளப் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதற்காக நேற்று காலை ஜிம்கானா மையத்திற்கு சென்றார் கோலி. அங்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் ஜிம்கானா சேர்மன் மற்றும் நிர்வாகிகள் கோலியை பாராட்டி பேசினர். இந்த தகவலை துணை பொதுச்செயலாளர் சுனில் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விராட் கோலி வருவதை அறிந்ததும், அப்பகுதியில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
ஜிம்கானா விளையாட்டு பயிற்சி மையம் இதற்கு முன் பல்வேறு கிரிக்கெட் வீரர்களை இந்திய அணிக்கு அளித்துள்ளது. அவர்களில் அஜித் வடேகர், சுனில் கவாஸ்கர், சந்தீப் பட்டீல், சஞ்சய் மஞ்ரேக்கர், பிரவீன் அம்ரே, அஜித் அகார்கர் ஆகியோர் குறிப்பிடத்தக்க வீரர்கள் ஆவர்.