தமது சொந்த ஊரான பொலனறுவைக்கு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையான மனிதராக சென்றுள்ளார்.
தமது சிறு பருவத்தில் தாம் வாழ்ந்த வீட்டிற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் வீட்டு முற்றத்தில் சிறிது நேரம் உலாவி சுதந்திரமாக பொழுதைக் கழித்ததுள்ளார்.
அதன் பின்னர் பிரதேசவாசிகளை சந்தித்து உரையாடவும் ஜனாதிபதி மறக்கவில்லை.
தமது சுகதுக்கங்களை விசாரிப்பதற்காக வருகைத்தந்த அரச தலைவரை அன்போடு வரவேற்ற மக்கள் அவருடன் சுமுகமான உரையாடலிலும் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் அங்குள்ள சில்லறைக் கடைக்கு சென்று பொருட்களின் விலைகளைப் பற்றிக் கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள் அங்கிருந்த மக்களுடனும் உரையாடினார்.
ஞாயிறு விடுமுறை நாளான இன்று தமது வாழ்வின் நிகழ்வுகள் பலவற்றை நினைவுப்படுத்திய வண்ணம் கிராமத்தில் உலாவிய ஜனாதிபதி அவர்கள் லக்ஷ உயன புகையிரத நிலையத்திற்கும் ஜனாதிபதி சென்றுள்ளார்.