அர்ஜுன் தற்போது படங்களில் ஹீரோவாக நடிப்பது மட்டுமில்லாமல், பல படங்கள் வில்லன் வேடங்களே ஏற்று நடித்து வருகிறார். இந்நிலையில், விஷால் நடிக்கும் ‘இரும்புத்திரை’ படத்தில் அர்ஜுன் வில்லன் வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, இப்படத்தில் ஆர்யா, விஷாலுக்கு வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் ஆர்யாவுக்கு இதில் நடிக்க முடியாமல் போனதால், அர்ஜுனை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சரி, தலைப்புக்கும் இந்த செய்திக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. விஷால் சினிமாவில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பு, அர்ஜுன் இயக்கி, நடித்த ‘வேதம்’ படத்தில் அவருக்கு உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.
‘இரும்புத்திரை’ படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். விஷால் தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.