நாட்டை போதை பொருளற்ற அடிமைகள் இல்லாமல் உருவாக்குவதற்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டியது, குடும்பம் என்ற கட்டமைப்பே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மொரட்டுவை பிரதேச பாடசாலை ஒன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மொரட்டுவை, தெஹிவளை, வெள்ளவத்தை, கல்கிஸ்சை மற்றும் கொழும்பில் இருந்து நீர்கொழும்பு வரையிலான பிரதேச மக்கள் பெருமளவு போதைக்கு அடிமைக்கப்பட்டுள்ளனர்.
வயது குறைந்தவர்கள் ஆனாலும் சமூகத்தில் இளையவர்களால் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் பரந்து பட்டதாக உள்ளது.
எனவே இளைய சமூகத்தினர் போதை பொருளுக்கு அடிமைப்படும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஒவ்வொருவரும் தமது குடும்பத்தினர் மீது அக்கரை கொள்ள வேண்டும் எனவ ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.