நல்லாட்சி அரசாங்கம் வெறுமனே 5 நட்சத்திர ஜனநாயத்தை தாண்டி 7 நட்சத்திர ஜனநாயகத்தை வழங்கும் அளவுக்கு செயற்பட்டு வருகின்றது என நிதியயமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.
முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் தேவையற்ற நிதிச் சுமையை தாங்க வேண்டியுள்ளது.
தற்போது அரிசி விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால் நெருக்கடி நிலை உருவாக்கியுள்ளது ஆனால் அதற்கு தீர்வொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.
அரசாங்கம் சலுகைகளை வழங்கியுள்ள போதிலும் அதன் நன்மைகளை மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை.
அரசாங்கத்தின் சலுகைகளை மக்களுக்கு வழங்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கிவருவகின்றோம். வாழ்க்கை செலவை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றாhர்.
கண்டி அஸ்கரி பீடத்தின் மகா நாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் மற்றும் மல்வத்துபீட மகா நாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகியோரை நிதியமைச்சர் நேற்று சந்தித்தார்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.