இலங்கைக்கு அச்சுறுத்தலாக செயற்பட்ட அமெரிக்க பெண்மணி!

இலங்கை இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்பட்ட போர்க்குற்றச்சாட்டு விசாரணை மேற்கொள்வதற்கு ஹைட்பிரிட் நீதிமன்றம் உருக்குவதற்கு அமெரிக்காவினால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நீக்கப்பட்ட, இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார் என ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நிஷா பிஸ்வால், இலங்கைக்கு வருகைத்தந்த சந்தர்ப்பத்தில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.

அந்த கலந்துரையாடலின் பின்னர் நிஷா பிஸ்வால் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, போர்க்குற்றச்சாட்டு குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.