பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டுபாய் வங்கி ஒன்றில் பெரும் தொகையான பணம் வைப்பிலிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பல மில்லியன் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளமைக்கான ஆதரங்களையும் பொலிஸார் திரட்டியுள்ளனர். மேலும், இது தொடர்பிலான தகவல்களை வங்கியில் பொலிஸார் கோரிய போதிலும், தகவல்களை வழங்க அந்த வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எவ்விதமான ஆதரங்களும் இன்றி நாமல் ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. அத்துடன், ஒரு சில சம்பவங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கவும் முடியாது.
எவ்வாறாயினும், றக்பி வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சந்திரிகா குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.