தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்பது குறித்து, கவர்னர் சட்ட ஆளுனர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக சசிகலா நாளை பதவி ஏற்பார் என்று கூறிவந்தனர், தற்போது அவர் நாளை பதவி ஏற்பது சந்தேகம் என கூறப்படுகிறது.
மேலும் மாநிலத்தில் அசாதாரண அரசியல் சூழல் ஏற்படுவதை கவர்னர் வித்யாசாகர் ராவ் விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்பது குறித்து இன்னும் கவர்னர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கோவையில் பாரதியார் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொள்ளவிருந்த கவர்னர் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு சென்னைக்கு விரைந்து இருப்பதாக செய்தி வெளியானது.
தற்போது அவர் தனது குடும்பத்தாரை மும்மைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலத்தில் எந்தவிதத்திலும் அரசியல் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவின் மீதும் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், இந்த வழக்கின் மீது இன்னும் ஒரு வார காலத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வரும்பட்சத்தில், மீண்டும் தமிழகத்தில் நிர்வாக சிக்கல்கள் ஏற்படக் கூடாது என்பதால் அதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் கவர்னர் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் சசிகலாவுக்கு பாதகமாக தீர்ப்பு வழங்கி விட்டால், அவர் முதல்வர் பதவி வகிப்பது கடினம் என்று கூறப்படுகிறது.