வெளிநாட்டு சாராயக் கடையில் சந்திரிக்கா!!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுவகைகள் விற்பனை செய்யும் கடைக்குள் சென்றது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கடைக்கு சென்று வருவதை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளதுடன் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

வசதிப்படைத்த சில மேட்டுக்குடி பெண்கள் மாத்திரமல்ல தற்போது சில சாதாரண பெண்களும் மது அருந்துவது பற்றிய செய்திகள் வெளியாகி வருகின்றன.

பாடசாலை மாணவிகள், கல்லூரி, பல்கலைக்கழக மாணவிகளும் மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

இலங்கை போன்ற நாடுகளில் இது புதிய கலாசாரமாக இருந்தாலும் மேற்குலக நாடுகளில் பெண்கள் மது அருந்துவது சர்வ சாதாரணமானது.

அவர்கள் மது அருந்தி விட்டு வீதிகளில் சண்டையிடும் செய்திகளை கூட சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

சிங்கள ஊடகங்களில் இன்று பலத்த விமர்சனங்களை முன்வைத்துள்ளது…