ஜெ., மறைவிற்கு பிறகு கட்சியை கைப்பற்றிய சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், ஆட்சியை கைப்பற்ற பல முயற்சிகளை செய்து வந்ததையடுத்து அதிமுகவினர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி சசிகலா தலைமையிலான அரசை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலா அதிமுக சட்டமன்ற தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சசிகலாவை முதல்வராக அறிவித்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், அதிமுக தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஏற்கனவே தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் உளவுத்துறை மூலம் பிரதமர் மோடி பார்வைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், தமிழகத்தை பிரதமர் மோடி உற்று நோக்கி வருவதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உச்சநீதிமன்றம் திடீரென சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு பற்றி அறிக்கை வெளியிட்டிருப்பது, கண்ணி வைத்து காத்து கொண்டிருந்த மத்திய அரசிடம் சசிகலா வசமாக மாட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் மறுபடியும் பன்னீர்செல்வம் தான் தமிழக முதல்வர் என்பதால் பன்னீர் குஷியாகிருப்பதாக அதிமுகவினரிடையே பரவலாக பேசி வருகிறார்கள்.