சசிகலா முதல்வராக தேர்வானது எப்படி.. மர்மங்கள் விரைவில் அம்பலமாகும்.. ஸ்டாலின் உறுதி!!

சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்வானது மர்மமாகவே இருக்கிறது என்றும் விரைவில் உண்மைகள் வெளி வரும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர உள்ள நிலையில் அவசர அவசரமாக சசிகலா முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அப்படி நடந்தால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு தமிழ்நாட்டை இட்டுச் செல்லும். எனவே, தீர்ப்பு வந்த பின்னர் சசிகலா பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த மு.க. ஸ்டாலின், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவரது மரணம், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வர் அலுவலக செயலர் வெங்கடரமணன் ஆகியோர் பதவி விலகியது என அனைத்துமே மர்மமாகவே உள்ளது என்று கூறினார்.

மேலும், சட்டசபைக் குழுத் தலைவராக சசிகலா தேர்வானதும் மர்மமாகவே உள்ளது. இந்த மர்மங்கள் எல்லாம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.