ரத்தம் குடிக்க காத்திருக்கும் ஜெ. ஆவி? நடுக்கத்தில் மன்னார்குடி கும்பல்!?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அவரது தோழியான சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.

போயஸ் கார்டனில் வேதா இல்லத்தில் தன்னை சந்திக்க வருபவர்களை வி.ஐ.பி. அறையில் தான் ஜெயலலிதா சந்திப்பாராம். அவருக்கு பிறகு அந்த அறையை சசிகலா பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.

ஆனால், ஜெயலலிதா தங்கிய அறையை மட்டும் சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ பயன்படுத்தாமல் பூட்டியே வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா ஆவி இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதனால் பதறிப் போன சசிகலா, ஜெ.,வின் ஆஸ்தான நம்பூதிரியை அழைத்து கார்டனில் ஆத்ம சாந்தி பூஜை செய்ததாக கார்டன் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்பிறகு கார்டனில் ஜெ., ஆவியின் அட்டகாசம் குறைந்திருப்பதாகவும், தற்போது, ஜெ., இறந்து 60 நாட்களான நிலையில் ஜெ.,யின் ஆவி உக்கிரமாகி இருப்பதாகவும் நம்பூதிரி தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

எங்கே நாம் முதல்வரானால், ஜெ.,வின் ஆவியால் பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சத்தில் சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பல் புலம்பி வருவதாக கார்டன் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.