அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக பதவியேற்று தனது பணிகளை சிறப்பாக செய்து வரும் டொனால்ட் டிரம்ப் பற்றி சில சுவாரஸ்யான தகவல்களை பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓவல் அலுவகத்திற்கு வயதான மனிதர் என்றால் அவர் டிரம்ப் தான். டிரம்பிற்கு உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையாம். இருப்பினும் தன்னை கட்டுக்கோப்புடன் வைத்துள்ளார்.
தன்னுடைய ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிக அளவு உணவு எடுத்துக் கொள்ளாமல் சொக்லேட், சிப்ஸ் மற்றும் டையட் பானங்கள் போன்றைவகள் அதிகம் சாப்பிட்டு வந்தார் என்று கூறப்படுகிறது.
மேலும் டிரம்பிற்கு புகைபிடிக்கும் பழக்கமோ மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் கிடையாதாம். அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் குறைந்த நேரம் மட்டுமே உறங்கும் பழக்கம் உடையவர். அதிகாலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்யாமல் டுவிட்டரில் ஒரு கருத்தை போட்டுவிட்டு, அவ்வப்போது கோல்ப் விளையாட சென்று விடும் பழக்கம் உடையவர் என்று கூறப்படுகிறது.
மேலும் டிரம்ப் இறைச்சி மற்றும் உருளைக் கிழங்கு பிரியர் என்று கூறப்படுகிறது. அவர் பழங்கள் மற்றும் உலர்ந்த பொருட்கள் போன்றவைகளை அதிகம் விரும்பி சாப்பிடுவதில்லையாம். ஆனால் அவர் செல்லும் விமானத்தில் தரம் உயர்ந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் வென்னிலா பேவர் Keebler Vienna Fingers போன்ற இரண்டும் கட்டாயம் இருக்குமாம்.
மேலும் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஸ்புட் உணவுகளை தவிர்த்த அவர், தற்போது ஜனாதிபதியான பின்பு தன்னுடைய விமானத்தில் Big Macs என்ற பாஸ்ட் புட் உணவுகள் இருக்கும் படி வைத்துள்ளார். அது அவருக்கு வெள்ளித்தட்டுகளில் பரிமாறப்படும் என்று கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்பு தனது உடல் எடையை 15 முதல் 20 பவுண்ட் வரை குறைக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.