பூமிக்கு மேல் விண்வெளியில் உள்ள கழிவுகளை அகற்றும் ஜப்பான் முயற்சி தோல்வி அடைந்தது.
விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள், செயற்கை கோள்கள் செயல் இழந்த பின் புவிஈர்ப்பு சக்தி இல்லாததால் அங்கேயே தங்கி மிதக்கின்றன. மேலும் அவற்றின் உடைந்த பாகங்களும் கழிவுகளாக மாறி சுற்றித்திரிகின்றன.
அதுபோன்று 10 கோடி கழிவு துண்டுகள் பூமியை சுற்றித்திரிகின்றன. அவை பூமி மீதும் ஆய்வுக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கை கோள்கள் மீதும் மோதும் அபாயம் உள்ளது.
அக்கழிவுகளை அகற்றும் பணியில் ஜப்பான் ஏரோஸ் டேஷ் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். மீன்பிடி வலை கம்பெனியின் உதவியுடன் எலெக்ட்ரோ டைனமிக் கயிறு தயாரித்து அதன் மூலம் கழிவுகளை பூமிக்கு அருகில் கொண்டு வந்து அவற்றை எடுத்து அழிக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டது.
ஆனால் ஜப்பானின் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. மாறாக தோல்வியில் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.