பௌத்த துறவி போல் வேடமிட்டு மது போதையில் தள்ளாடியபடி யாசகம் பெற்று வந்த நபரொருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டிய பௌத்த இளைஞர் சங்க உறுப்பினர்கள் இந்த நபரை பிடித்து விகாராதிபதியின் மூலம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் நாவலப்பிட்டி நகரில் இடம் பெற்றுள்ளது.
குறித்த நபர் நாவலப்பிட்டி நகரில் மது போதையில் தள்ளாடியபடி அட்சய பாத்திரத்துடன் கடைகளில் யாசகம் பெறுவதனை அவதானித்த மேற்குறிப்பிட்ட சங்கத்தைச்சேர்ந்த இளைஞர் குழுவினர் குறித்த நபரை பிடித்து நகரில் அமைந்துள்ள பௌத்த ஆலயத்தின் விகாராதிபதியிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த விகாராதிபதி அந் நபர் அணிந்திருந்த காவியுடையை களைந்து விட்டு போர்வையொன்றை அணியச்செய்து நாவலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.