இந்தி முன்னணி நடிகை சோனாக்ஷி சின்ஹா. ‘லிங்கா’ படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்த இவர் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டி…
“சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். என்றாலும் அடிக்கடி வந்தது இல்லை. ‘லிங்கா’ பட வெளியீட்டின்போது வந்தேன். அதன் பிறகு வர வாய்ப்பு கிடைக்கவில்லை.
‘லிங்கா’ படத்தில் நடித்த பிறகு பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால், அப்போது இந்தி படங்களில் ‘பிசி’யாக இருந்ததால் தமிழில் நடிக்க முடியவில்லை.
சமீபகாலமாக தமிழ் படங்களை பார்த்து வருகிறேன். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து படமாக்குகிறார்கள். எனவே தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். வழக்கமான கதையாக இல்லாமல் எனது பங்களிப்பு அதிகமாக இருக்கும், வித்தியாசமான கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். நான் நடித்த ‘லுத்ரா’ இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்தால் அதில் நடிக்க விரும்புகிறேன்.
தமிழில் ரஜினியுடனும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.”