தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நான் போட்டியிடவில்லை!

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் விஷால் அணி சார்பில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுவார் என்று முன்பு அறிவிக்கப்பட்டது.

இப்போது, விஷால் மீதான சஸ்பெண்டு ரத்து செய்யப்பட்டதையடுத்து விஷால் தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

அவருக்கு கமல் முன்மொழிந்திருக்கிறார்.

இதற்கிடையே, குஷ்பு பொருளாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக கூறப்பட்டது. அதை மறுத்த குஷ்பு, ‘தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நான் எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை.

என்னால் 100 சதவீதம் நேரம் ஒதுக்க முடியாது. விஷால் அணிதான் சிறந்ததை செய்யும் சிறந்த அணி’ என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருக்கிறார்.