100 கோடி கிளப்பில் இணைந்தது ‘பைரவா’

பொங்கல் விருந்தாக கடந்த மாதம் 12ஆம் தேதி வெளிவந்த இளையதளபதி விஜய்யின் ‘பைரவா’ திரைப்படம் 25 நாட்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள நிலையில் இந்த படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

உலகம் முழுவதும் இந்த 25 நாட்களில் இந்த படம் ரூ.108 கோடி வசூலாகியுள்ளது. உலகம் முழுவதும் இந்த படம் ரூ.72 கோடிக்கு வியாபாரம் ஆன நிலையில் தமிழகத்தில் ரு.62.5 கோடி, இந்தியாவின் பிற மாநிலங்களில் ரூ.15 கோடி மற்றும் வெளிநாட்டில் ரூ.30 கோடி என மொத்தம் ரூ.108 கோடி வசூல் செய்துள்ளது.

‘தெறி’ அளவுக்கு இல்லாவிடினும் விஜய்யின் வெற்றி படங்களில் ஒன்றாக ‘பைரவா’ இணைந்துள்ளதாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.