முருகன் தரிசனத்தால் நான்கு விதமான நன்மைகளைப் பெறலாம் என்று ‘கந்தர் கலிவெண்பா’ எடுத்துரைக்கிறது.
1. பிறவித் துன்பத்தைப் போக்கவல்லது
2. இடையூறுகள், நோய்கள், பில்லி, சூன்யம் போன்ற ஏவல் வினைகள், பாம்பு, பிசாசு, கொடிய பூதம், பெருந்தீ, வெள்ளம், பகைவர்கள் ஆகியவைகளிலிருந்தும் காக்கும்.
3. தீமை விளைவிக்கும் கொடிய நஞ்சுகொண்ட விலங்குகள் முதலிய எவையாயினும் எவ்விடத்தும் எப்போது வந்து எதிர்த்தாலும் எழுந்தருளிக் காப்பார்.
4. மரண பயத்தை நீக்கும்.