2020-ம் ஆண்டு இடம் பெற போகும் ஜனாதிபதி தேர்தலில்,கோத்தாபாய ராஜபக்ஷ போட்டியிட்டால் சந்தேகத்துக்கு இடமின்றித் தோல்வி அடைவார் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைவார். எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கே வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டு எதிரணியினர், தனித்துப் போட்டியிடப் போகின்றனர் என மஹிந்த ராஜபக்ஷ கூறினாலும், அத்தேர்தலில் கூட்டு எதிரணி, போட்டியிடப் போவதில்லை என அவர் கூறினார்.