ஆசியாவின் அடுத்த புலியாக மாறும் வாய்ப்பு இலங்கை இருப்பதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின், பொது இராஜதந்திர மற்றும் பொது விவகாரங்களுக்கான பதில் அடிநிலை செயலர் புறூஸ் வாட்டன் தெரிவித்துள்ளார்.
இலங்கை 69 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, வொசிங்டனில் நேற்று முன்தினம் இடம் பெற்ற நிகழ்வில், உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் இந்த வாய்ப்புக் குறித்து ஒருபோதும் சந்தேகம் இருக்கவில்லை எனவும், இப்போதைய நிலைமையில், அடுத்த ஆசியப் புலி இலங்கையாகும். அதற்கான ஆற்றலை இலங்கை பெற்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும் வணிகத்தை முன்னேற்றவும் உதவுவதன் மூலம் இலங்கையின் சிறிய நடுத்தர முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவுகிறது.
இலங்கையில் ஜனநாயக முன்னேற்றம் ஏற்பட்டிருக்காவிடின், இந்த ஒத்துழைப்பு சாத்தியமாகியிருக்காது எனவும் 21 ஆம் நூற்றாண்டில் ஒரு நாட்டில் மிக முக்கிய சொத்தாக அதன் மக்களே இருப்பர் எனவும் தெரிவித்துள்ளார்.
பெரிய சாதனைகளை புரியக்கூடிய அறிவுள்ள மக்களை, இலங்கையினால் பெறக்கூடியதாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.