கோடிகளை கொட்டி பாரிய தங்கங்களோடு வெளிநாடுகளுக்கு பறந்த மகிந்த!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் அவர் ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ் மூலமாக மேற்கொண்ட விமான பயணத்தின் விபரங்களும் அதற்கான செலவுகளும் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் 2014.12.08 மற்றும் 2014.12.31 தினங்களில் மகிந்த இந்தியாவின் திருப்பதி தலத்திற்கு சென்றதற்காக 39 இலட்சங்கள் செலவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பயணத்தின் போது ராஜபக்சர்கள் தரப்பில் அதிகளவானவர்கள் சுற்றுலாவில் கலந்து கொண்டதாகவும், இலங்கையில் இருந்து பாரிய அளவு தங்கம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2011.03.09 ஆப்பிரிக்கா விஜயத்திற்காக UL 1081 விமானத்தை முற்று முழுதாக ஒதுக்கிக் கொண்டதாகவும் அதற்கான செலவு 350 இலட்சங்களாகும்.

2014.10.20 மற்றும் 2014.11.20 மகிந்த ரோம் நகருக்கு சென்றதற்காக UL 4571 விமானம் ஒதுக்கப்பட்டதாகவும், அதற்கு 5 கோடிகள் (500 இலட்சங்கள்) செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் 2014.12 10 மற்றும் 2014.12.15 தினங்களில் நேபாளத்திற்கு மகிந்த செல்வதற்காக UL 001 மற்றும் UL 4111 ஒதுக்கப்பட்டு அதற்கு 280 இலட்சங்கள் செலவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.