யாழ். புங்குடுதீவு மாணவி சிவலேகநாதன் வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய ஒன்பது சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மாணவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேகநபர்களுக்கும் பிணை வழங்க கோரி யாழ் .மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் 09 பேரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுவன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.