இறந்த காதலன் நினைவாக ‘பார்பி’ போன்று உடல் மாற்று ஆபரேசன் செய்த மாடல் அழகி

பிரேசில் நாட்டின் சாவ்பாடோ நகரை சேர்ந்தவர் ஜெனீபர் பாம்ப்லோனா (24). இவர் முன்னாள் மாடல் அழகி ஆவார். இவரது காதலர் செல்சோ சான்டி பான்ஸ்.

இவர் ஒரு ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ பிரியர். அறுவை சிகிச்சை மூலம் தனது முகம் மற்றும் உடல் அழகை அடிக்கடி மாற்றி வந்தார். அவரது அழகில் மயங்கிய மாடல் அழகி ஜெனீபர்அவர் மீது காதல் கொண்டார்.

இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரத்த புற்று நோயால் காதலன் செல்சோ சான்டிபான்ஸ் மரணம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெனீபர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டார்.

அதில் இருந்து படிப்படியாக குணமடைந்தார். தற்போது காதலன் நினைவாக தனது முகம் மற்றும் உடலில் மாற்று ஆபரேசன் செய்து கொண்டு ‘பார்பி’ பொம்மை போன்ற தோற்றத்துக்கு மாறினார்.

அதற்காக 80 ஆயிரம் பவுண்டு அதாவது ரூ.66 லட்சத்து 79 ஆயிரம் செலவு செய்துள்ளார். முன்னாள் மாடல் அழகியான ஜெனீபர் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்.

‘மனித பொம்மையாக மாற வேண்டும் என்பதே எனது நோக்கம். பிரேசிலில் என்னை அனைவரும் சுகி பொம்மை என்றே அழைக்கிறார்கள். எனது காதலர் இறந்ததும் அவரைப் போன்றே நானும் பொம்மை போன்று உடல் அமைப்பை மாற்ற வேண்டும். அதுவே அவருக்கு நான் செய்யும் மரியாதை என கருதினேன் என்றார்.