ஜெயலலிதாவின் ஆவி ஓபிஎஸ் உடம்பில் புகுந்ததா?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். இதனையடுத்து அவருடைய உடல் எம்ஜிஆர் நினைவிட வாளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்தே அவருடைய ஆன்மா அந்த நினைவிடத்தில் நிற்பது போன்ற புகைப்படங்கள் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அழுக்குரல் கேட்பதாக மற்றொரு வதந்தியும் பரவலாக பரவியது.

வர்தா புயலின் போது சென்னையே பெரும் பிரச்சனைக்குள்ளான நிலையில் ஜெயலலிதா நினைவிட மேற்கூரைக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.ஜெயலலிதாவின் ஆவி தான் தனது நினைவிடத்தை காப்பதாகவும் அதனால் தான் நினைவிடக்கூரைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனையடுத்து மெரீனா கடற்கரையில் பெரும் புரட்சி வெடித்தது. ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மெரீனா கடற்கரையில் புரட்சி நடத்தினர். இதனைத் தொடர்ந்து சில நாட்களில் கப்பல்கள் மோதி எண்ணெய் கசிவு கடலில் கலந்து மாசடைந்துள்ளது.

ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 45 நிமிடங்கள் மவுனமாக அமர்ந்து போராட்டம் நடத்திய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் சசிகலா பற்றி பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்தார். இதனால் தமிழக அரசியல் களம் ஒரே நாள் இரவில் பரபரப்படைந்தது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் ஆன்மா உந்தியதால்தான் தான் உண்மைகளை கூற வந்ததாக கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

என்னுடைய மனக்கவலைகளை கூற மட்டும் வரவில்லை. புரட்சித்தலைவரின் கோடான கோடி தொண்டர்களுக்கும் நடந்த உண்மைகளை தெரிவிக்க வேண்டும் என்று அம்மாவின் ஆன்மா என்னை உந்தியது என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

ஜெயலலிதாவிற்கு முறையாக இறுதி சடங்குகள் செய்யப்பட்டவில்லை என்றும் அதனால் தான் அவரது ஆன்மா சாந்தியடையாமல், நினைவிடம், போயஸ் இல்லம் போன்றவற்றில் சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இப்போது ஒ.பன்னீர் செல்வமும் அம்மாவின் ஆன்மா உந்தியது என்று கூறியுள்ளதால் ஒருவேளை சசிகலாவை பழிவாங்கும் நோக்கத்துடன் ஜெயலலிதாவின் ஆன்மா ஓ.பன்னீர் செல்வத்தின் உடம்பிற்குள் புகுந்து விட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மரணத்திற்கு பிறகும் ஜெயலலிதாவின் ஆன்மா என்னவோ சொல்ல வருகிறது என்று கூறி வருகின்றனர் அதிமுக தொண்டர்கள்.