அதிமுகவிற்கு துரோகம் செய்யவில்லை…. ராஜினாமாவை வாபஸ் வாங்குவேன்!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய ஒ.பன்னீர் செல்வம், சட்டசபையில் எனது பலத்தை நிரூபிப்பேன் என்றார்.

என்னை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் விவரத்தை சட்டமன்றத்தில் வெளியிடுவேன் என்றும் கூறினார். கட்டாய சூழல் அமைந்தால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்று கூறிய ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவிற்கு ஒருபோதும் துரோகம் செய்ததில்லை என்று கூறினார். பாஜக என்னை இயக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் மக்களை நேரில் சந்திக்கப் போவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சட்டசபை கூடும்போதுதான் எத்தனை எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது தெரியவரும் என்றும் கூறினார்.

கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்கப் போவதாகவும் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே நடப்பதாகவும் கூறினார். தீபாவிற்கும் ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.