முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாரத்தையெல்லாம் நேற்றே இறக்கி வைத்து விட்டதாகவும் அவர் கூறினார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகள் மரியாதைக்கு உரியர்கள் என்று அவர் கூறினார்.
அவர்களுக்கான மரியாதையை நாள் எப்போதும் அளித்தேன். இனிமேலும் அவர்களுக்கான மரியாதையை அளிப்பேன் என்று கூறினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா என்னுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கிறேன் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அம்மாவின் நினைவிடத்தில் பாரத்தை நேற்றே இறக்கி வைத்துவிட்டேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நேற்றிரவு முதல் ஓபிஎஸின் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பும் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.