முதல்வர் பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய சந்தேகங்கள் பரவலாக நாட்டு மக்களிடையே உள்ளது. அதை போக்க வேண்டிய கடமை, அரசுக்கு இருக்கிறது என்பதை உணர்கிறேன். உச்சநீதிமன்றத்தில் தற்போது பொறுப்பிலுள்ள நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்ப்டடு, உண்மையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வழி செய்யப்படும்” என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதுகுறித்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கூறியதாவது: விசாரணை கமிஷன் அமைக்கும் முடிவு வரவேற்கத்தக்கது.
இதன்மூலம் ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையும். அவரது ஆன்மா இதுவரை சாந்தியடையவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால்தான் ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையும். இந்த நடவடிக்கை எடுப்பதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
ஜெயலலிதாவின் தோழி கீதா கூறுகையில், சத்தியம் வென்றுள்ளது. இவ்வளவு நாள் ஓ.பி.எஸ் தூங்கிக்கொண்டிருந்தாரா. இப்போதாவது நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி என்றார்.