ஜெயலலிதாவின் சக்தி இருக்கிறதாம்… அசைக்க முடியாதாம்.. சொல்கிறார் சசிகலா

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று சசிகலா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் 131 பேரும், கூட்டணி கட்சியைச் சேர்ந்த கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரும் பங்கேற்றனர்.

சசிகலா மீது ஓபிஎஸ் பரபரப்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பின்னர் நடைபெற்ற கூட்டம் என்பதால் அதிக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய சசிகலா, நம்மை பிரித்தாளும் சக்தி யாருக்கும் இல்லை என்று கூறினார்

ஜெயலலிதாவின் சக்தி நம்முடன் இருப்பதால் எந்த சக்தியும் நம்மை அசைத்து பார்க்க முடியாது என்று கூறிய அவர் அதிமுக ஒரே குடும்பமாக உள்ளது என்றும் கூறினார்.

அதிமுகவின் ஒற்றுமையை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது. அதிமுக எம்எல்ஏக்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கவில்லை என்று கூறிய சசிகலா, ஜெயலலிதா காட்டிய வழியில் அனைவரும் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.