-
மேஷம்
மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம்யாவும் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
-
கடகம்
கடகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பூசம் நட்சத்திரக்காரர்கள் அவசரப்பட வேண்டாம். வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
-
சிம்மம்
சிம்மம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். உடல் நலம் பாதிக்கும். பழைய கடன் பிரச்னை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
-
கன்னி
கன்னி: பெரியோரின் ஆசி கிட்டும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.
-
துலாம்
துலாம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
-
தனுசு
தனுசு: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
-
மகரம்
மகரம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.
-
கும்பம்
கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். தொட்ட காரியம் துலங்கும் நாள்.
-
மீனம்
மீனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.