தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக ஒன்றியம்: அமைச்சர் மனோ திட்டம்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஜனநாயக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தை எதிர்காலத்தில் ஸ்தாபிக்க போவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தெற்கில் உள்ள அரசியல் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது எனக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி உட்பட நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தை ஆரம்பித்த பின்னர் அதன் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டு எதிர்க்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, இடதுசாரி கட்சிகள், மத அமைப்புகள் மாத்திரமல்லாது மாநாயக்க தேரர்கள் உட்பட சகல மத தலைவர்களுடன் பகிரங்க உரையாடல்களுக்கு சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மனோ மேலும் தெரிவித்துள்ளார்.