நூறு சதவீதம் நான்தான் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பேன் என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வம் பச்சையான துரோகத்தை செய்துள்ளார் என்றும் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “நான்தான் இத்தனை ஆண்டுகளாக அம்மாவைப் பார்த்துக்கொண்டேன். அம்மா எவ்வளவு வலியைத் தாங்கினார்கள் என எனக்கு மட்டுமே தெரியும்.
மேலும் அம்மா மரணம் தொடர்பான எந்த விசாரணைக்கும் தயார். அம்மா மறைந்த போது நான் அனுபவித்த வேதனை எனக்கு மட்டுமே தெரியும்.
நூறு சதவீதம் நான்தான் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்பேன். என்னிடம் நன்றாக பேசிக் கொண்டே இவ்வளவு பச்சையான துரோகத்தை செய்துள்ளார் பன்னீர்செல்வம்”. இவ்வாறு சசிகலா தனது பேட்டியில் தெரிவித்தார்.