தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை சசிகலாவிடமிருந்து மீட்க அதிரடி நடவடிக்கையை அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கும் பனிப்போர் தொடங்கியுள்ள நிலையில் இருவரும் அதிரடி அறிவிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் படி செய்தியாளர்களுக்கு பிரத்யேக பேட்டியளித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது, மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் மக்களுக்காக நினைவிடமாக மாற்றப்படும்.
அங்கிருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை போலும் என தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். தற்போது, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா போயஸ் இல்லத்தில் தான் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.